Uncategorized

sound camera action

By January 14, 2015No Comments

அதர்வா தி ஆரிஜின்

atharva

டிவி, எப்.எம்.ரேடியோக்கள்னு டெக்னாலஜி வளர்ந்துக்கிட்டே போனாலும் இப்போதும் ரசிகர்கள் மத்தியில புத்தகங்கள் வாசிக்கிற பழக்கமும், ஆர்வமும் குறையல.

அப்படிப்பட்ட ரசனை உள்ளவங்களுக்காக டெக்னாலஜியைப் பயன்படுத்தி எப்படு புத்தக வாசிப்பை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போகலாம்னு யோசிச்சோம் அதுதான் இந்த ஷாருக்கானின் ‘அதர்வா தி ஆரிஜின்’ என்றார் கட்டிடகலைஞர் திரு. ரமேஷ் தமிழ்மணி.

சென்னையை தலைமையிடமாய் கொண்ட பி.எல்.டி டிசைன் ஸ்டுடியோ நிறுவனத்தை 2007ல் தொடங்கிய ரமேஷ் தமிழ்மணி இந்நிறுவனம் மூலம் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள200க்கும் மேற்பட்ட வணிக மற்றும் குடியிருப்பு வளாகங்களை வடிவமைத்துள்ளனர். ‘அதர்வா’ நாவலின் ஓவியரின் நட்பு இந்நாவலுக்கு வித்தாய் அமைந்தது.

 

வேலம்மாள் கல்வி அறக்கட்டளையின் முதன்மை தாளாளர் வேல் மோகன் மற்றும் BLD டிசைன் ஸ்டுடியோ தலைமை நிர்வாகி ரமேஷ் தமிழ்மணி, தொழிலதிபர் வின்சன்ட் அடைக்கலராஜ், நடிகர் பாடகர் சஞ்சய் ராகவன் ஆகியோர், அவரவர் துறையின் வல்லுனர்களாக உள்ள இவர்களின் கூட்டு முயற்சியில் 2013ல் விர்சு ஸ்டுடியோஸ் தொடங்கப்பட்டது.

பல நேர்த்தியான கதைகளை முற்போக்கு வரைகலை நுட்பங்களுடன் கலைக்கும், கதைக்கும் உண்டான இடைவெளியை குறைக்கும் நோக்கில் செயல்படும் முன்னணி நிறுவனம் விர்சு

ஸ்டுடியோஸ். ஒவ்வொரு பொழுதுபோக்கு துறையும் தத்தம் வசதிக்கேற்ப தொழில்நுட்ப வளர்ச்சியில் மாறுதல்களை அமைத்து கொண்டு வருகிறது. கலைஞர்கள் அவர் தம் கலையை முன் நகர்த்த கலைஞர்களுக்கு தொழிநுட்பம் பெரிதும் உதவுகிறது. ‘அதர்வா – தி ஆரிஜின் ’ (Atharva- The Origin)’ எனும் இந்த நாவல் இதற்கு உதாரணமாய் இருக்கும்.

ஓவியர் ரமேஷ் ஆச்சார்யா வரைந்த தொடர் ஓவியங்களை காமிக் புத்தகமாக வெளியிட ரமேஷ் தமிழ்மணியை அணுகினார். ஆச்சார்யா வின் சில கதாபாத்திரங்கள் மற்றும் கதைகளத்திற்கான நிலபரப்பு ஓவியங்கள் தமிழ் மணியின் கற்பனையை உசுப்பி விட்டது. இதை ஒரு கதையாய் எழுதலாம் என்று முன்வைத்தார் ரமேஷ் தமிழ்மணி.

“ரமேஷ் ஆச்சார்யாவின் ஓவியங்கள் சர்வதேச தரத்தினுடையதாய் இருந்தது. இந்த நாவல் எழுதுவது எனக்கு நல்ல அனுபவமாய் அமைந்தது. முடிவடையும் தருவாயில் உள்ள இந்நாவல்

விரைவில் வெளிவர உள்ளது” என்றார் ரமேஷ் தமிழ்மணி.

தனது அகண்ட தோள்களின் வலிமையில், சீர்கொண்ட பார்வையின் தேடலில் தன் எதிர்காலத்தை நோக்கி செல்லும் மன்னனின் கதை தான் இந்த ‘ அதர்வா – தி ஆரிஜின் ’ (Atharva- The

Origin) முப்பரிமான வரைகலை மற்றும் அனிமேஷன் தொழில்நுட்பத்தில் கிராஃபிக் நாவலாக இது உருவாகி வருகிறது.

இது எவ்வகையிலும் நமது சரித்திரத்தையோ, இதிகாசத்தையோ அடிப்படையாகக் கொண்ட கதை அல்ல. புகழ் பெற்ற ‘ஹேரி பாட்டர்’ , ‘ லாத் ஆஃப் தி ரிங்க்ஸ்’ தொடர்களுக்கு நிகராய்

அமைய உள்ளது ‘அதர்வா’.

அதர்வா – தி ஆரிஜின் ஓர் இளம் மன்னன் மற்றும் அவனின் தேடல் பற்றிய கதை. விசித்திரமான பறவைகள் ,விலங்குகள் , கொடிய அரக்க குணம் கொண்ட உயிரினங்கள் வாழும் புராண

காலத்து தீவு ஒன்றை பின்னணி என எழுத்தாளர் மற்றும் ஓவியர் கூட்டுமுயற்சியில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மன்னன் அதர்வாவின் பயணத்தை கண் முன்னே நிறுத்தும் வகையில் சில முக்கியமான காட்சிகள் 3D வடிவில் முழுபக்க ஓவியங்களாக உருவாக்கபட்டுள்ளது. நிகழ்கால கலை

நுட்பங்களுடன் உருவாகும் இந்த கிராபிக்ஸ் நாவல் வாசகர்களுக்கு கிராபிக்ஸ் நாவல்களுக்கான இலக்கணமாய் அமையும் என விர்சு ஸ்டுடியோஸ் நம்பிக்கையளிக்கிறது.

இந்த நாவலில் வரும் மன்னன் தான் பிரபல பாலிவுட் ஹீரோ ஷாருக்கான். அவர்கிட்ட இந்த புதிய முயற்சியைப் பத்தி சொன்ன உடனே ஹேப்பி ஆயிட்டார். நீங்க என்ன சொல்றீங்களோ அதை செய்றேன். ஆனால் எந்தக் காரணத்தைக் கொண்டும் எந்த இடத்திலேயும் என்னோட இமேஜுக்கு மட்டும் எந்த டேமேஜும் வந்துடக்கூடாதுன்னு சொன்னார். அவரோட ஈடுபாடே இந்த நாவலை உலக அளவுல கொண்டு போய் சேர்க்கும்.

2015ன் மத்தியில் வெளியாக உள்ள இந்நாவல் அச்சு பிரதி, ஸ்மார்ட் டி.வி, கிண்டில்(Kindle), இ-புத்தகம் என வாசகர்களின் வசதிக்கு ஏதுவாய் தயாராகி வருகிறது.

ஜனவரி 3-ஆம் தேதி அனிமேஷன் காட்சிகளை கொண்ட இந்த நாவலுக்கான டீஸரை வெளியிட்ட போது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. உடனே தோன்றியது ஒரு ஐடியா. இந்த நாவலை அப்படியே படமாக தயாரித்தால் என்ன?

ஆமாம், விரைவில் இது படமாகவும் தயாராக உள்ளது. அதற்கான முன்னோட்டமாக இதை எடுத்துக் கொள்ளலாம் என்றார்.

அப்போ இனிமே ஷாருக்கானை பார்க்க மட்டுமில்ல, படிக்கவும் செய்யலாம்னு சொல்லுங்க….

Leave a Reply